புது மாப்பிள்ளை அனிருத் ரவிச்சந்தர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். நான் சைவம், சைவம், சைவம் மட்டுமே என பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். அவருக்கு மனைவியாகப் போகும் காவ்யா மாறன் அசைவ பிரியை ஆவார்.
அனிருத் சைவ பிரியராக இருக்கும் நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் காவ்யா மாறனுக்கு அசைவம் சாப்பிடத் தான் அதிகம் பிடிக்கும்.
அனிருத், காவ்யா
பிடித்த சாப்பாடு
அனிருத் ரவிச்சந்தருக்கு பிடித்த உணவு காரமான ஆந்திரா மீல்ஸ். சென்னையில் இருக்கும் தி நேஷனல் லாட்ஜில் அந்த காரமான ஆந்திரா மீல்ஸ் கிடைக்கும் என்பதால் நேரம் கிடைக்கும்போது அங்கு சென்று சாப்பிடுகிறார். மேலும் தி நேஷனல் லாட்ஜ் சாப்பாடு அருமையாக இருக்கும் என அனிருத் பரிந்துரை செய்ததால் அவரின் ரசிகர்களும் அந்த கடைக்கு சென்று சாப்பிடுகிறார்கள். தனக்கு பிடித்த உணவு ஆந்திரா மீல்ஸ் என்று பேட்டி ஒன்றில் அனிருத் தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகியிருக்கிறது. தான் ஒரு வெஜிடேரியன் என்பதையும் அவ்வப்போது பதிவு செய்திருக்கிறார் அனிருத்.
பிரியாணி பிரியை
காவ்யா மாறன் அசைவம் சாப்பிடுவார். அவருக்கு பிடித்த அசைவ சாப்பாடு என்றால் அது பிரியாணி ஆகும். மேலும் அவர் ஒரு தோசை பிரியை. அது தவிர்த்து பீட்சா, சூஷியை விரும்பி சாப்பிடுவார். காவ்யா ஒரு non vegetarian என்பது அனிருத்துக்கு தெரியாமல் இல்லை. அது காவ்யாவின் விருப்பம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது தான் காதலில் அற்புதமான விஷயம். ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களின் உணவு விஷயத்தை வைத்து விமர்சிப்பது சரி அல்ல.
கலாநிதி மாறன் மருமகன்
சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்து இருப்பதால் பெரிய இடத்துக்கு தான் மாப்பிள்ளையாக செல்கிறார் அனிருத் என கோலிவுட் ரசிகர்கள் பேசுகிறார்கள். சன் டிவி நிகழ்ச்சியில் கீ போர்டு வாசிக்கச் சென்ற அனிருத் இன்று அந்த டிவி சேனல் ஓனரின் மகளுக்கு கணவனாகிறார். அனிருத் ஜாதகம் நன்றாக இருக்கிறது. அதனால் அவர் ஆசைப்பட்ட பெண்ணே மனைவியாக வருகிறார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
