நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளது. இப்படி, 12 போட்டிகளில், இரு அணிகளும் மோதவுள்ளன.
இந்நிலையில், இத்தொடருக்கான முழு அட்டவணை தகவல் குறித்து தற்போது பார்க்கலாம்.
டி20 தொடர்: முதலில், இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும்.
இத்தொடரின் முதல் போட்டி, அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 24, 27, 30 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில், கடைசி 4 போட்டிகளும் நடைபெறும்.
இத்தொடரின் அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி, பகல் 12:30 மணிக்கு துவங்கும்.
ஒருநாள் தொடர்: அடுத்து, இரு அணிகளுக்கும் இடையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.
இதில், முதல் ஒருநாள் போட்டி, நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும். பிறகு, நவம்பர் 7, 10, 13, 15 ஆகிய தேதிகளில் எஞ்சிய நான்கு ஒருநாள் போட்டிகளும் நடைபெறும்.
நேரம் என்ன? இந்த 5 ஒருநாள் போட்டிகளும், இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு துவங்கும்.
டெஸ்ட் தொடர்: கடைசியாக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும். இதில், முதல் போட்டி, நவம்பர் 19 முதல் 23ஆம் தேதி வரையும், இரண்டாவது போட்டி, நவம்பர் 27 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையும் நடைபெறும்.
நேரம் என்ன? இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும், இந்திய நேரப்படி, அதிகாலை 3:30 மணிக்கு துவங்கும்.
எதில் பார்க்க முடியும்? இந்தியாவில் சோனி டென் 1, சோனி டென் 3, சோனி டென் 5 ஆகிய சேனல்களில் போட்டியை காண முடியும். சோனி, டென் 4 சேனல் மூலம், இத்தொடரை தமிழில் பார்க்க முடியும்.
சோனி லைப் ஆப் மூலம், இத்தொடரை நேரலையில் பார்க்க முடியும்.
டெஸ்ட் தொடர் முக்கியம்: இந்திய அணிக்கு, நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகமுக்கியமானது. இத்தொடரில், இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருவேளை, ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.
இதனால், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும், வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், கேப்டன் ஷுப்மன் கில் இருக்கிறார். ஒருவேளை, இந்திய அணி, 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தால், அது கில் கேப்டன்ஸி மீது கடும் விமர்சனத்தை பெற்றுக் கொடுக்கும். இதனால், நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்திய அணிக்கு அரையிறுதி போட்டி மாதிரி அமைந்துள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில், இந்தியா வந்த நியூசிலாந்து அணி, அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ஒருநாள் அணி விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
