திருச்சியில் தமிழ்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (21.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக அரசைப் பொறுத்தவரையிலும், தமிழக முதல்வர் விஜய், கடந்த மூன்று மாதங்களாக என்னென்ன பணிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து துறைகளையும் அழைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாக, சென்னை மாநகரைப் பொறுத்தவரையிலும், 15 மண்டலங்களாகப் பிரித்து, 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து, ஏழு அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவின் மூலமாக முதலமைச்சர் விஜய், நாள்தோறும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்புகூட, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அவரே அமர்ந்து, அனைத்துப் பணிகளும் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தார். எந்தப் பணிகளும் தேக்கமடைந்துவிடக் கூடாது என்ற நோக்கில், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், நாள்தோறும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக எவ்வளவு மழை பெய்துள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். இதுவரையிலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொருட்சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படாமல் அரசு பாதுகாத்து வருகிறது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. அதே நேரத்தில், இயற்கை பாதிப்புகள் ஏற்படும்போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
ந்த அடிப்படையில்தான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாள்தோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் இந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, கடந்த நான்கைந்து மாத காலத்தில், வேகமாகவும் விரைவாகவும் தேங்கிக் கிடந்த 40 சதவீதப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
