-நமது நிருபர்-
இத்தாலியில் விலைவாசி உயர்வு, குறைந்த ஊதியம், கல்வி சீர்திருத்த கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் குழுவாக இணைந்து, வீடுகளின் ஜன்னல்களை உடைத்தல், கடைகளை சூறையாடுவது மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நீடிக்கிறது. போராட்டங்களை தடுக்க கடுமையான விதிகளை இத்தாலி பிரதமர் மெலோனி அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
* ஆர்ப்பாட்டம் செய்வது உரிமை; உரிமையை நிலை நாட்டுவதை தவிர நகரங்களை சூறையாடுவதை ஏற்க முடியாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* நாசவேலை செய்வதிலும், திருடுவதிலும் புரட்சிகரமானது எதுவும் இல்லை. திருட்டு, நாசவேலையில் ஈடுபடுவது போராட்டம் கிடையாது; குற்றச்செயல்கள்.
* போராட்டங்களில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.21 லட்சத்து 25 ஆயிரத்து 890 அபராதம் விதிக்கப்படும்.
* சிறார்கள் செய்யும் சேதங்களுக்கு அவர்களின் பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும். 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்களை தடுப்பு காவலில் அடைக்க வேண்டும்.
* போராட்டக்காரர்கள் தங்கள் முகங்களை மறைத்து கொண்டாலோ அல்லது மக்களை காயப்படுத்தினாலோ தண்டனைகள் கடுமையாக்கப்படும்.
இவ்வாறு இத்தாலி பிரதமர் மெலோனி கூறினார்.
