தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார், சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ரூபேஷ் குமார் மீனா திருச்சி மாநகரக் காவல் ஆணையராகவும், காமினி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். முதல்வர் விஜய் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்தத் திடீர் உத்தரவுக்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்த உத்தரவு ஒன்று வெளியாகியிருக்கிறது. தலைமைச் செயலகத்திலிருந்து முதன்மைச் செயலாளர் கார்த்திக் இந்த உத்தரவை வெளியிட்டு இருக்கிறார்.
ஐபிஎஸ் சந்தோஷ் குமார்
பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார் ஐபிஎஸ், தற்போது சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த ரூபேஷ் குமார் மீனாவுக்குப் பதிலாக இவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஐபிஎஸ் ரூபேஷ் குமார் மீனா
ஏற்கெனவே சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக இருந்தரூபேஷ் குமார் மீனா,தற்போது திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎஸ் காமினி
திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் காமினி, தற்போது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தீபாவளி நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மேலும், தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது.
டிஜிபி அலுவலகத்திற்குச் சென்ற முதல்வர் விஜய்
முதல்முறையாக இன்று தான் முதல்வர் விஜய் டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டார். காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கிய முதல்வர் விஜய், சில மணி நேரங்களுக்குப் பிறகு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Source link
