IND vs NZ 1st T20 – இந்திய உத்தேச 11 அணி: சூர்யவன்ஷி, புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பிருக்கா? – india team predicted playing 11 for 1st t20 match against new zealand team

நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், முதல் டி20 போட்டி, அக்டோபர் 22ஆம் தேதி, இந்திய நேரப்படி பகல் 12:30 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான உத்தேச 11 அணி குறித்து தற்போது பார்க்கலாம்.

ஓபனர்கள் இடம்: சமீப காலமாகவே இந்திய டி20 அணியில், ஓபனர்கள் இடங்களுக்கு மூன்று வீரர்களை தேர்வு செய்து வருகிறார்கள். அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இருக்கிறார்கள். கடந்த, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில், ஓபனர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் இருந்த நிலையில், தற்போது நியூசிலாந்து தொடரிலும் இவர்கள்தான் ஓபனர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

ஒருவேளை, முதல் மூன்று போட்டிகளில் அபிஷேக் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடர்ச்சியாக சொதப்பினால் மட்டுமே, சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

மிடில் வரிசை: அடுத்து, மூன்றாவது இடம் இஷான் கிஷனுக்குதான். இவர், சமீப காலமாகவே, மூன்றாவது இடத்தில் தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி வருகிறார். அடித்து ஆட வேண்டிய நேரத்தில் அடித்து ஆடும் நிலையில், நிதானமாக ஆடும் நேரத்தில் நிதானமாகவும் விளையாடி அசத்துகிறார்.

அடுத்து, நான்காவது இடத்தில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், 5ஆவது இடத்தில் துணைக் கேப்டன் திலக் வர்மாவும் இருப்பார்கள்.

ஆல்ரவுண்டர்கள்: அடுத்து, ஆல்ரவுண்டர்களுக்கான இடங்களில் ஷிவம் துபே, அக்சர் படேல் ஆகியோர் இருப்பார்கள். முதல் போட்டிக்கான பிட்ச், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் என்பதால், இந்திய அணி, ஒரேயொரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் மட்டும் விளையாட உள்ளது.

பௌலர்கள்: முழுநேர பௌலர்கள் இடங்களில், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதன்மை பௌலர்களாலும், கூடுதலாக மயங்க் யாதவும் அணியில் இருப்பார். இதில், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் பவர் பிளேவில் அபாரமாக பந்துவீசக் கூடியவர்கள் என்பதால், இந்த இருவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும், முழுநேர சுழற்பந்து வீச்சாளர் இடத்தில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார். ரிஸ்ட் ஸ்பின்னரான இவர், வேகத்திற்கு சாதகமான பிட்ச்களிலும் அபாரமாக பந்துவீசக் கூடியவர். இதனால்தான், குல்தீப் யாதவுக்கும் பிளேயிங் 11-ல் இடம் கிடைக்க உள்ளது.

இந்திய உத்தேச 11 அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ். குல்தீப் யாதவ்.

ஒருவேளை, முதல் டி20 போட்டியில், குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசவில்லை என்றால், அந்த இடத்தில் அடுத்து வருண் சக்ரவர்த்தியை ஆட வைக்க அதிக வாய்ப்புள்ளது. வருண் சக்ரவர்த்தியாலும், வேகத்திற்கு சாதகமான பிட்ச்களிலும் அபாரமாக பந்துவீச முடியும்.

இந்திய டி20 அணி, சமீபத்தில் வேகத்திற்கு சாதகமாக இங்கிலாந்து பிட்சில் விளையாடி, 5 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Source link