-நமது சிறப்பு நிருபர்-
2026ம் ஆண்டில் சிறந்த சுகாதார சேவையை கொண்ட முதல் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. இப்சோஸ் என்ற சந்தை ஆராய்சி நிறுவனம் 32 நாடுகளை சுகாதார தரத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது. ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை 22,528 பேரிடம் ஆன்லைனில் கருத்து சேகரித்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
சுகாதார காப்பீடு மூலம் குறைந்த செலவில் அனைவருக்கும் உயர்தர மருத்துவத்தை வழங்குதல், அதி நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ படுக்கை வசதிகள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
டாப் 10 பட்டியல் இதோ!
1.மலேசியா
2. சிங்கப்பூர்
3. இந்தியா
4.வியட்நாம்
5.ஆஸ்திரேலியா
6.நெதர்லாந்து
7.தாய்லாந்து
8.தென் கொரியா
9.ஸ்பெயின்
10.தென் ஆப்ரிக்கா
* இந்த பட்டியலின்படி பிரான்ஸ், 16ம் இடம், பிரிட்டன், 18, கனடா, 19, அமெரிக்கா, 20, ஜப்பான், 22, ஜெர்மனி, 24ம் இடத்தில் உள்ளன.
