சந்தானம் நடிப்பில் இந்தாண்டு இனும் ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இந்தாண்டு மார்ச்சில் அவரது புதுப்படத்தின் பூஜை நடந்தது. இப்படம் அவரது 20வது படமாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், கே7 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ரியோ நடிப்பில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இப்படத்தை இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பூஜையுடன் தொடங்கிய நிலையில் நேற்று முன் தினமாக அக்டோபர் 19ஆம் தேதி நிறைவுற்றது.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர்கள் சிம்பு, ஆர்யா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் தங்களது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். போஸ்டரின் படி படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ஆம்புலன்ஸ் மேற்கூரையில் கையில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சந்தானம் நிற்கிறார்.
அதிசய பிறவி என்ற தலைப்பில் ரஜினி நடிப்பில் 1990ஆம் ஆண்டு ஒரு படம் வெளியாகியிருந்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது இதே தலைப்பில் சந்தானம் நடித்துள்ளதால் படத்திற்கு கூடுதல் வெளிச்சம் கிடைத்துள்ளது.
Launching the first look of #AthisayaPiravi! Best wishes to @iamsanthanam and the entire team.#SudhamanKrishna@venusinfotain@K7Studiosoffl@kjganesh082@gvprakash@VijayKCelliahpic.twitter.com/b3QFLHgiRt
