வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை சேகரிப்பதற்கு ஏதுவாக பல்வேறு கட்ட முயற்சிகளை ஒவ்வொரு முறையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் தான் அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. மறுபுறம் சூப்பர் எல்-நினோ தாக்கம் ஆகியவற்றை சமாளிப்பதற்கு மழைநீர் சேகரிப்பு என்பது அவசியமாகிறது. இந்நிலையில் காமராஜர் சாலையில் எழிலகம் அலுவலகத்தில் அமைந்திருக்கக் கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தமிழக முதல்வர் விஜய் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
சுமார் 800 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்ல கட்டிடத்தைப் பார்வையிட்ட தமிழக முதல்வர், மழைநீர் சேகரிப்பு இலட்சிணையை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய நோக்கமாக மழைநீர் சேகரிப்பு வெறும் அரசின் திட்டமாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
