இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்

நமது நிருபர்

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை குறைந்ததால், சென்னையில் தாயும், மகளும் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

கொளத்துார், ஜவஹர் நகரில் வசிப்பவர் விஜயலட்சுமி, 43; சமூக ஆர்வலர். அவரது மகள் ஸ்டெபி, 26; வழக்கறிஞர். அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த இருவரும், இந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளனர்.

தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் நிற்கும் கொளத்துார் தொகுதியில் 34 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஒருவராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் ஸ்டெபி; படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது தாய் செங்கொடி விஜயலட்சுமி, ஆலந்துார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அன்பரசன், அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

ஸ்டெபி கூறியதாவது: வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி, இலவசம் என்ற பெயரில் ஓட்டுக்காக வாக்குறுதி தரும் திறனற்ற அரசியலை வெறுக்கிறோம். நாங்கள் எந்த வாக்குறுதியையும் தரப்போவதில்லை. எப்படி பயணிப்போம் என்பதை உறுதியாக காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link