தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதே நேரத்தில் காய்ச்சல் பரவல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், இந்த 24 வயது வாலிபருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் டெங்குவிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், உடலில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பின் தீவிரம் காரணமாக அவரது நிலைமை மோசமடைந்தது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சோக சம்பவத்தைத் தொடர்ந்து, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மருத்துவத் துறையினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகுவதும் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒரே வழி என்று எச்சரிக்கப்படுகிறது
