தரமற்ற உணவு விற்பனையை கண்டறிவது, குற்றவாளிகளைத் தண்டிப்பது எப்படி? துக்காராம் பதில்

புதுடில்லி: மஹாராஷ்டிர மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் துக்காராம் முண்டே, சந்தையில் விற்கப்படும் தரமற்ற உணவுகள், குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறைகள் குறித்து விவரித்துள்ளார்.

என்டிடிவி ஆங்கில செய்தி சேனலுக்கு துக்காராம் முண்டே அளித்த பதில்; ஒரு கடையில் கலப்படமான உணவுப் பொருள் கண்டறியப்பட்டால், அதை விற்பனையிலிருந்து அகற்றுவது மட்டுமே முதல் படியாகும்.

இதனுடன் ஆபத்து முடிந்துவிடுவதில்லை; சிக்கலும் தீர்ந்து விடுவதில்லை. அந்தப் பொருள் எங்கிருந்து வந்தது, எப்படிச் சந்தைக்கு வந்தது, வேறு எந்தெந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப் பட்டு உள்ளன என்பதைக் கண்டறிவதே மிகப்பெரிய சவாலாகும்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில்லறை விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தர் துவங்கி, உற்பத்தியாளர் என அந்த பொருளைப் பின்தொடர்ந்து கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

உணவகங்கள், கபேக்கள், மற்றும் கிளவுட் கிச்சன்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; விதிகளை மீறுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இவ்வாறு துக்காராம் கூறினார்.

Source link