சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் – chennai airport metro rail service stop for technical issues on oct 21st

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். இதனால் பயணிகள் கடும் அவதி

தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ பணியாளர்கள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சரி செய்யும் ஊழியர்கள்

தற்போது அலுவலக நேரம் என்பதால் பலர் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் வருவது வழக்கம். இந்தச் சூழலில் ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ நிலைய ஊழியர்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்

இந்தச் சூழலில் மக்கள் பஸ் மற்றும் மின்சார ரயில் போன்ற மாற்று சேவையைப் பயன்படுத்தி தங்களது பயணத்தைத் தொடரலாம். இதனால் மக்களின் நேரவிரயம் சேமிக்கப்பட்டு, தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு சரியான நேரத்தில் செல்ல உதவும்.

டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்த பயணிகள்

இந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர். அதனைத் தொடர்ந்து இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வருத்தம் தெரிவித்தனர். மேலும் கோளாறு சரி செய்யப்பட்டதாகவும் அறிவித்தனர். இந்த சூழலில் இதே மாதத்தில் 2 ஆம் முறையாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

பயணிகள் கவனத்திற்கு

மக்கள் தங்களது அலுவலக வேலைகள், சொந்தப் பணிகள் மற்றும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசின் பொதுப் போக்குவரத்து சேவைகளான அரசு பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் இது போன்ற எதிர்பாராத தடங்கள் மற்றும் கோளாறுகள் ஏற்படலாம். எனவே மக்கள் எப்போதும் தங்களது மாற்று வழிப் பயணத்திற்கான அடுத்த திட்டமிடலைக் கொண்டிருக்க வேண்டும். ஒரே சேவையை மட்டும் நம்பிப் பயணத்தைத் திட்டமிடாது, செல்ல வேண்டிய பகுதிக்கு இருக்கும் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ சேவைகளை அறிந்திருக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை இந்த மாதம் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டு இருந்தது. பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி இடையே காலை 7 மணிக்குத் மெட்ரோ ரயில் சேவை தொடரும் எனத் தொடங்கும்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கே ரயில் சேவை தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Source link