அண்மையாகவே பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் குறிப்பாக புதுச்சேரியில் முதல்வர் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் அவை போலி மிரட்டல்கள் என்பது தெரிய வந்தாலும் மிரட்டல் விடும் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனாம்பேட்டை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
