இதற்குப் பெயர் தான், ‘அந்தர் பல்டி!’ இப்படி தலைகீழாக மாற்றிப் பேச, பழனியில் இருக்கும் அந்த சாமியிடமிருந்தே அழுத்தம் வந்ததோ, என்னவோ!

பறக்கும் கார்களின் ஒருநாள் வாடகையே லட்சங்களில் இருக்குமே! அதனால் சாமானிய மக்கள் அதை எப்படி உபயோகப்படுத்த முடியும்? அரசியல்வாதிகளின், ‘ஸ்டன்டு’க்கும், படாடோபத்துக்கும் வேண்டுமானால் உபயோகப்படும், ஹரி!
மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களை மட்டும் படிக்காமல், அதையும் தாண்டி படிக்க வேண்டும், தங்களை சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களிலிருந்து படிப்பினை பெற வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ முடியும். விஜய் கூறியிருப்பது சரியே!
தான் ஏறுவதற்குப் பயன்படும் ஏணிகளை, பலமுறை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே… இப்படி தானே பேசுவார்! பரமபத விளையாட்டு தான் போங்க!
காங்., கட்சியின் குறிக்கோளே, பா.ஜ., அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்க வேண்டும் என்பது தானே! அவர்கள் எப்படி கண்டிப்பர்?
