பிரான்சில் போராட்டங்கள் நடக்கும் இடத்திற்கு செல்வதை தவிருங்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

– நமது நிருபர் –

பிரான்சில் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது; வன்முறை வெடித்ததால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

அதன் விபரம்:

* பிரான்சில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல் மற்றும் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

* போராட்டங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பிரான்ஸ் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல், வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

* உள்ளூர் செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை (https://gouvernement.fr) தொடர்ந்து கவனியுங்கள். பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஏதேனும் இடையூறுகள் உள்ளனவா என்பதை (https://ratp.fr) சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

* ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், இந்திய மக்கள் இந்திய தூரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

+33 6 48 34 00 63 | cons.paris@mea.gov.in (பாரிஸ், இந்தியத் தூதரகம்), +33 7 43 16 25 59 | cgo.marseille@mea.gov.in (மார்சேய்), இந்தியத் துணைத் தூதரகம்.

இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Source link