Gold Rate Today: படுத்தே விட்டது தங்கம் விலை.. இன்று மிக பெரியளவில் சரிந்தது.. பொதுமக்கள் ஹேப்பி

சென்னை: அமெரிக்காவில் அரசு பத்திரங்களின் வருவாய் திடீரென குறைந்ததால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று புதன்கிழமை உயர்ந்தது. இருப்பினும் ஓவர்நைட்டில் திடீரென அது சரிந்தது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை இன்று மிக பெரியளவில் சரிந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் எடுக்கவுள்ள வட்டி விகித முடிவுகளை பொறுத்தே தங்கம் விலை இருக்கும்.

அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் வருவாய் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்தது. இதனால் தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் திரும்ப ஆரம்பித்தனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை லேசாக உயர்ந்தது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3% உயர்ந்து 4,137.94 டாலராக இருந்தது. அமெரிக்காவில் டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 0.2% உயர்ந்து 4,150 டாலரில் வர்த்தகமானது.. இருப்பினும், ஓவர் நைட்டில் தங்கம் விலை மீண்டும் சர்வதேச சந்தையில் சரிந்தது.

இப்போதைக்கு முதலீட்டாளர்களின் முழு கவனம் அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. அடுத்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்காவின் பணவீக்க அறிக்கையும் முக்கியமானது. இந்த இரண்டும் தான் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் விஷயமாக இருக்கும்.

தற்போதைய சூழலில் இந்த மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு குறைவு. அதேநேரம் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு அதிகம். இதனால் டிசம்பர் மாதம் வரை தங்கம் விலையில் பெரியளவில் ஏற்றமும் இருக்காது இறக்கமும் இருக்காது. இதே ரேஞ்சிற்குள் சுற்றி சுற்றி வரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

அதேநேரம் டிசம்பர் மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த 88% வாய்ப்பு இருக்கிறது. அப்படி உயரும்போது தங்கம் விலை சட்டென குறையும். பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. ஆனால், வட்டி விகிதங்கள் உயரும்போது வட்டி வருவாய் தரும் முதலீடுகளின் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால், தங்கத்தின் முதலீடு எப்போதுமே குறையும்.

சென்னையில் நேற்றைய தினம் தங்கம் விலை சரிந்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.100 குறைந்து, ரூ.13,390க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.230க்கு விற்கப்பட்டது..

சென்னையில் இன்றும் தங்கம் விலை சரிந்தது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து, ரூ.1,05,880க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,235க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.225க்கு விற்கப்படுகிறது.

22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,05,880

21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,120

20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,07,920

19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,560

18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280

17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,280

16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120

15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,120

14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் – ரூ.1,08,720