தமிழ்நாட்டில் முதன்முறையாக ’விஸ்டாடோம் சொகுசு ரயில் பெட்டி’ சேவை இன்று (22-10-26) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த புதிய முயற்சி சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முற்றிலும் கண்ணாடியினால் (கூரை மற்றும் ஜன்னல்கள்) சூழப்பட்டிருக்கும் இந்த ரயில் பெட்டி, பிரத்தியேகமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்ற இந்த ரயில் பெட்டியானது, இருக்கையில் அமர்ந்தபடியே வெளியே உள்ள மலைகள் மற்றும் இயற்கை காட்சிகளைக் கண்டு மகிழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசுப் பெட்டியின் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் முழுமையாக அகன்ற கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதிலுள்ள இருக்கைகள் 360 டிகிரி கோணத்தில் சுழலும், அதனால் பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடியே இயற்கை அழகை ரசிக்க முடியும்.
இந்த விஸ்டாடோம் சொகுசு ரயில் பெட்டியானது, மதுரை – குருவாயூர் (கேரளம்) இடையே இயக்கப்படும் மதுரை – குருவாயூர் – மதுரை விரைவு ரயிலில் சோதனை அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டியானது, மதுரையில் இருந்து (22-10-26) முதல் (15-01-27) வரை வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். அதேபோல, குருவாயூரில் இருந்து (23-10-26) முதல் (16-01-27) வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் மொத்தம் 44 இருக்கைகள் மட்டுமே உள்ளன. மேலும் வைஃபை, ஜிபிஎஸ் திரைகள் மற்றும் பயோ-டாய்லெட் போன்ற அதிநவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அதிநவீன ரயில் பெட்டியானது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
