அனிருத், காவ்யா மாறன் திருமணம் கிரீஸ்ல இல்ல: நண்பேன்டா பிஜார்ன் புது தகவல்

அனிருத் திருமணம் எங்கு?: பிரதமர் மோடி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு சென்னையில் மூன்று இடங்களில் திருமண வரவேற்பு நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியானது.

இருந்தாலும் திருமண தேதி, அது நடக்கும் இடத்தை அனிருத் குடும்பத்தாரோ, காவ்யா மாறனின் குடும்பத்தாரோ இதுவரை உறுதி செய்யவில்லை. இந்திய திரையு பிரபலங்கள் இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.ஆனால் இந்த அனிருத், காவ்யா என்ன வித்தியாசமாக கிரீஸை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது.

சென்னையில் திருமணம்: இந்நிலையில் அனிருத்துடன் சேர்ந்து கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து அவருக்கு நல்ல நண்பராக இருந்து வரும் பிஜார்னிடம், அனி கல்யாணம் கிரீஸில் நடக்கிறதாமே என அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, கிரீஸில் எல்லாம் இல்லை. சென்னையில் தான் கல்யாணம் நடக்கப் போகிறது என்றார்.

புது தகவல்: திருமணம் பற்றி இரு வீட்டாரும் எதுவும் அறிவிக்காத நிலையில் பிஜார்ன் சொன்ன தகவல் வியக்க வைக்கிறது. கிரீஸ் திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கும் ரஜினிகாந்த், அனிருத், கலாநிதி மாறன், மு.க. ஸ்டாலின் ஆகிய நான்கு பேரின் குடும்பங்கள் செல்ல நான்கு தனி விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என வலைப்பேச்சு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் பிஜார்னோ வெளிநாடு இல்லை நம்ம சென்னையில் தான் திருமணம் என்று கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அனிருத்தும் சரி, காவ்யா மாறனும் சரி ரொம்ப பிரைவேட்டான ஆட்கள் தான். ஆனால் திருமணம் நடக்கும் இடத்தை கூட சொல்லாமல் இருப்பது சரியில்லை. சொன்னால் சந்தோஷப்படுவோம் தானே என உரிமையோடு கேட்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் சென்னையில் திருமணம் நடந்தால் அனிருத்துக்கு நெருக்கமான முதல்வர் ஜோசப் விஜய் நிச்சயம் வருவார் என்று நம்பப்படுகிறது. அப்படி விஜய்ணா திருமணத்திற்கு வந்தால் அங்கு உள்ளவர்களின் ரியாக்ஷன் குறித்து ஏற்கனவே மீம்ஸ் வீடியோக்களை மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

இதற்கிடையே மோடி உள்ளிட்டோருக்கு கலாநிதி மாறன் கொடுத்த பத்திரிகை திருமணத்திற்கானது அல்ல மாறாக வரவேற்புக்கானது என்றும் தகவல் வெளியானது. புதுப்பட அப்டேட்டை எதிர்பார்ப்பது மாதிரி அனிருத் திருமண அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அனிருத், காவ்யா சுவாரஸ்ய தகவல்: இந்நிலையில் சைவம் சாப்பிடும் அனிருத் ஏன் அசைவ பிரியை காவ்யா மாறனை திருமணம் செய்ய வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் விவாதம் நடக்கிறது. யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அனிருத்தின் விருப்பம் ஆகும். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.

விரைவில் கணவன், மனைவியாகப் போகும் அனிருத், காவ்யா மாறனின் சொத்துமதிப்பு விபரங்களை தேடிப் பிடித்து படிக்கிறார்கள் ரசிகர்கள். அனிருத்திடம் ரூ. 60 கோடி சொத்தும், காவ்யாவிடம் ரூ. 409 கோடி சொத்தும் உள்ளது. காவ்யாவின் அப்பா கலாநிதி மாறனிடமோ ரூ. 24, 600 கோடி சொத்து இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சன் குழும நிறுவனரான கலாநிதி மாறனின் ஒரே வாரிசான காவ்யாவை திருமணம் செய்து கொண்டு ராஜாவாகப் போகிறார் அனிருத் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Source link