ராமாயணா ஏ.ஆர். ரஹ்மான் பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்பே சரியா கணித்த ரசிகர்

ராமாயணா ரஹ்மான்: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பிர் கபூர், யஷ், காஜல் அகர்வால், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ராமாயணா படத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன விஷயம் தான் அனைவரையும் பேச வைத்திருக்கிறது. 2014ம் ஆண்டு சதீஷ் எனும் ரசிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய இமெயிலை வாசித்துக் காட்டினார். அந்த இமெயிலில் சதீஷ் கூறியதாவது,

வெள்ளிக்கிழமை அதிகாலை என கனவில் உங்களை பார்த்தேன். அந்த கனவு நினைவாகும் என நம்புவதால் அதை உங்களுடன் ஷேர் செய்து கொள்கிறேன். ராமாயணாவை விவரிக்கும் இசை நிகழ்சிச்சியை நீங்கள் இந்தியா மற்றும் உலக முழுவதும் நடத்துவதாக கனா கண்டேன் என்று எழுதியிருந்தார். அந்த மெயிலை நேற்று அவர் மீண்டும் அனுப்பி நினைவிருக்கிறதா என கேட்டார். என்னை பற்றி கனவு கண்ட சதீஷ் நியூயார்க் நகரில் வசிக்கிறார் என்றார்.

யஷ் பேச்சு: 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ரஹ்மானை பற்றி கண்ட கனவு அப்படியே நடந்திருப்பதை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சென்னை நிகழ்ச்சியில் அழகு தமிழில் பேசி அசத்தினார் ராவணனாக நடித்திருக்கும் யஷ்.

அவர் சென்னைக்கு வந்தாலே கன்னடத்தில் அல்ல தமிழில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் இந்த செயலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் அன்பு பற்றி யஷ் கூறியதாவது,

தமிழ் மக்கள் சும்மா எதையும் ஏத்துக்க மாட்டாங்க. அது ஈஸி இல்லை என எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் எனக்கு அன்பு கொடுத்திருக்கிறீர்கள். ரசிகர்கள் விசில் அடித்தால் நமக்கு ஊக்கம் கிடைக்கும் என்று சாய் பல்லவி சொன்னார். அது உண்மை. உங்களின் அன்பு தான் முக்கியம். ரசிகர்களின் ஊக்குவிப்பு இல்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது. இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள். ராமாயணா படத்தை நிச்சயம் என்ஜாய் பண்ணுவீங்க.

நான் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர். அவரின் பாடல்களை கேட்டு தமிழ் கற்றுக் கொண்டேன் என சொல்லலாம். ஜென்டில்மேன் பாடல்களை கேட்டு டான்ஸ் ஆடியிருக்கிறேன். நான் கர்நாடகாவில் இருந்தாலும் அப்பொழுதே எனக்கு தமிழ் வரிகள் புரிந்தது. ரங்கீலா பாட்டு கேட்டு இந்தி கற்றுக் கொண்டேன் என்றார்.

ஹீரோ ரன்பிர்: ராமர் ரன்பிர் கபூர் பற்றி சீதை சாய் பல்லவி கூறியதாவது, அந்த வாரத்திலோ, மாதத்திலோ ரிலீஸான தமிழ் படங்களை நான் கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால் ரன்பிர் கபூர் பார்த்திருப்பார். மகாராஜாவில் இருந்து பத்தா வரை அனைத்து தென்னிந்திய படங்களையும் பார்த்து தன்னை அப்டேட் செய்து கொள்கிறார். ராமராக நடித்திருப்பது எளிது கிடையாது. ஆனால் அவருக்குள் ஒரு inner peace இருக்கிறது. அதை கண்களில் காட்டியிருக்கிறார் என்றார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சாய் பல்லவி ரசிகர்கள்: ராமாயணா ட்ரெய்லரில் சாய் பல்லவியை பார்த்த இந்தி ரசிகர்களோ, இவர் சூர்ப்பனகையாக நடிக்க வேண்டியவர், சீதைக்கு லாயக்கே இல்லை என மோசமாக விமர்சித்தார்கள். படம் வரும்போது தான் சாய் பல்லவியின் அருமை தெரியும் என அவரின் ரசிகர்கள் அந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link