நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்றப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ”முதலில் பந்துவீச விரும்புகிறோம். பௌலிங் பிட்ச், எப்படி ஒத்துழைக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. நியூசிலாந்தில் காலநிலையை சரியாக கணிப்பது சற்று கடினம்தான். இருப்பினும், இந்திய அணியில் இருக்கும் அனைவரும் திறமையானவர்கள் என்பதால், எப்படிப்பட்ட கண்டிஷனிலும் அபாரமாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் இன்று விளையாடுவார்கள்” எனக் கூறினார்.
இந்திய அணி பிளேயிங் 11 – சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, நமன் தீர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.
