தேவா-வின் ஹிட் பாடல்களை பாடியவர்: பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மரணம்

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுளள் பாடகர் கிருஷ்ணா ராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மரணடைந்தார். தேவா இசையில் சூப்பர் ஹிட் பாடலான தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். 

தமிழ் சினிமா 2026-ம் ஆண்டு பாரதிராஜா, பாக்யராஜ், உள்ளிட்ட உன்னதாமான கலைஞர்களை இழந்துள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் மரமடைந்தவர் இசையமைப்பாளர் தேவா. தேனிசை தென்றல் என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த அக்டோபர் 17-ந் தேதி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் அவரின் தம்பி மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் மரணமடைந்தார். இவர்கள் இருவரின் மரணம் தேவா குடும்பத்தில் பெரிய இழப்பாக அமைந்துள்ளது. 

இதனிடையே தேவா இசையில் பல ஹிட் பாடல்களை பாடிய பாடகர் கிருஷ்ணா ராஜ் தனது 75வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணடைந்தார். தேவா இசையில் பொற்காலம் படத்தில் அமைந்த சூப்பர் ஹிட் பாடலான தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாடலை பாடியவர் தான் இந்த கிருஷ்ணராஜ். இந்த பாடலை நான் இறந்த பிறகு என் இறுதி ஊர்வலத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் முன்னாள் அதிபர் கேட்டுக்கொண்டார். அதன்படி அவரது இறுதி ஊர்வலத்தில் இந்த பாடல் ஒலிக்கப்பட்டது. 

தேவா இசையமைத்த அதிகாலை சுபவேளை திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். நெஞ்சிருக்கும்வரை படத்தில் வரும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, காத்து அடிக்குது, சிரிச்சுட்டு போனாலும், பொற்காலம் படத்தில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து, காதலே நிம்மதி படத்தில் விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி,  உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடியவர். 

தேவாவின் பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு பாடலையாவது பாடி 90-களின் விருப்பமான பாடகராக இருந்தவர். 2000-களுக்குப் பின் பருத்திவீரனில், ’அய்யயோ’ கழுகு திரைப்படத்தில், ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார். இம்சை அரசன் படத்தில் பஞ்சுமெத்தை கனியே என்ற பாடலையும் பாடியுள்ள கிருஷ்ணராஜ், கடைசியா 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் நாலு நிமிஷம் பாடலைப் பாடியிருந்தார்.

75 வயதான கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக்குறை காரணமாக  சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்ததார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

Source link