துபாய்: சவுதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளதோடு, 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனை சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று மதியம் 12.43 மணிக்கு வெளியிடப்பட்ட செய்தியில், ”தம்மம் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதி செய்து உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வருகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
