பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ்(75) உடல்நலக் குறைவால் இன்று(22.10.2026) காலமானார். சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேம்படிதாளம் எனும் ஊரில் பிறந்த இவர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்து தனது படிப்பை முடித்தார். பின்பு சினிமாவை நோக்கி பயணித்த அவர், 1989ஆம் ஆண்டு தனது முதல் வாய்ப்பை பெற்றார். தேவா இசையில் ‘ அதிகாலை சுபவேளை’ எனும் படத்தில் ‘உன்ன நான் தொட்டதுக்கு…’ என்ற பாடலை பாடினார். இதற்கு பிறகு தேவா இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அவரது ஆஸ்தான பாடகராகவும் வலம் வந்தார்.
தேவா – கிருஷ்ணராஜ் கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பின்வருமாறு. கருப்பு நிலா படத்தில் ‘நம்ம ஊரு தோட்டத்துல’, காதல் கோட்டை படத்தில் ‘நலம் நலமறிய ஆவல்’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, அருணாச்சலம் படத்தில் ‘நகுமோ’, பொற்காலம் படத்தில் ‘தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து…’, காதலே நிம்மதி படத்தில் ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’, நினைத்தேன் வந்தாய் படத்தில் ‘மனிஷா மனிஷா போல் இருப்பாலா’, நட்புக்காக படத்தில் ‘மீசக்கார நண்பா (சோகம்)’, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் ‘சின்ன சின்ன கிளியே’, நினைவிருக்கும் வரை படத்தில் ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ – ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ஆனந்த பூங்காற்றே படத்தில் ‘பாட்டுக்கு பாலைவனம்’, நெஞ்சினிலே படத்தில் ‘மதராஸு தோஸ்து நீ’, உன்னருகே நானிருந்தால் படத்தில் ‘எந்தன் உயிரே’ – ‘பொடவ கட்டின’, ஏழையின் சிரிப்பில் படத்தில் ‘எப்பா எப்பா அய்யப்பா’, கண்ணால் பேசவா படத்தில் ‘தொட்டாச்சிணுங்கி போல தொட்டாச்சிணுங்கி போல’, 123 படத்தில் ‘காஞ்சிவரம் போவோம்’ ஆகியவைகள் ஆகும். இதில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் மறைந்த எஸ்.ஆர்.நாதன் அவர்களால் பாராட்டப் பட்டது. இவரைன் இறுது அஞ்சலியில் இப்பாடல் ஒலிக்கப்பட்டது.
தேவாவைத் தவிர்த்து மற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் இவர் பாடிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளது. சிற்பி இசையில் நாட்டாமை படத்தில் ‘நாட்டாமை பாதம் பட்டா’, மூவேந்தர் படத்தில் ‘சோக்கு சுந்தரி’,விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் ‘பாசமுள்ள சூரியனே’, வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் ‘நான் ரெடி நீங்க ரெடியா’ ஆகிய பாடல்கள் ஆகும். இளையராஜா இசையில் நானும் ஓர் இந்தியன் படத்தில் ‘ஏமாறாதே ஏமாற்ற’, கண்ணாத்தாள் படத்தில் ‘உன்னை நம்பும்’ ஆகிய பாடல்கள் ஆகும்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் சிம்மராசி படத்தில் ‘தாயே திரிசூலி’, ராஜகாளி அம்மன் படத்தில் ‘தங்கச்சி என் தங்கச்சி’, பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் ‘நான் சால்டு கொட்டா’, ராஜா படத்தில் ‘வெத்தலக் கொடியே’ ஆகிய பாடல்கள் ஆகும். பரணி இசையில் பார்வை ஒன்றே போதுமே படத்தில் ‘காதல் பண்ணாதீங்க’ – ‘நீ பாத்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்’, சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ‘கண்ணும் கண்ணும் பார்துகிட்டா டிங் டிங் டிங்’ ஆகிய பாடல்கள் ஆகும்.
பரத்வாஜ் இசையில் ராஜ்ஜியம் படத்தில் ‘தமிழன் தமிழன் இவன் தான் தமிழன்’, சௌந்தர்யன் இசையில் கலாட்டா கணபதி படத்தில் ‘கண்ணிமைக்கும் நேரத்திலே காதல் கொண்டேனடி’, சபேஷ் முரளி இசையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ‘பஞ்சு மெத்தை கனியே’, யுவன் ஷங்கர் ராஜா இசையில் பருத்திவீரன் படத்தில் அய்யய்யோ – கழுகு படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’, கவி பெரியதம்பி இசையில் முத்துக்கு முத்தாக படத்தில் ‘காத்தடிச்சா நோகுமுன்னு பொத்தி பொத்தி வளர்த்தீங்க’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாஜ்மஹால் படத்தில் ‘ஈச்சி எலுமிச்சி’, ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று படத்தில் ‘நாலு நிமிஷம் உன்ன காணாம’ ஆகிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.
சினிமாவைத் தவிர்த்து பிரபல இயேசு பாடலான ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ பாடலையும் கிருஷ்ணராஜ் தான் பாடியுள்ளார்.
