விஜய்ணா மகன் சஞ்சய்: முதல்வர் ஜோசப் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஒரு நகைக்கடையின் பிராண்டு அம்பாசிடராக ஆகியிருக்கிறார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த நகைக்கடை ஜேசன் சஞ்சய் தான் தங்களுக்கு சரியான ஆள் என முடிவு செய்து அவரை தொடர்பு கொண்டதும் குட்டி தளபதி சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இதையடுத்து அண்மையில் ஜேசன் சஞ்சயை வைத்து விளம்பர பட ஷூட்டிங் கூட நடந்துவிட்டதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பா விஜய் முன்னதாக நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க தற்போது அவர் வழியில் மகனும் நடித்திருக்கிறார்.
விஜய் முதல்வராக இருக்கும்போது அவர் மகனை தங்கள் கடை நகைகளை விளம்பரம் செய்ய வைப்பது சிறந்த விளம்பர யுக்தி ஆகும். அது எந்த கடை என்பதை தெரிந்து கொள்ள தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொருத்தமான ஆள்: நகைக்கடை விளம்பரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் ஜேசன் சஞ்சய். அவர் மூலம் இளம் தலைமுறையினரை கவரலாம். சிக்மா படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இதை தானா தம்பி, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து படம் எடுத்தீர்கள் என சிக்மா பார்த்தவர்கள் ஜேசனை விமர்சித்தார்கள்.
தான் வைத்திருந்த ஐடியாவை ஜேசன் படமாக்கிய விதம் தான் சரியில்லை. சொதப்பல் என்றெல்லாம் விமர்சனம் வந்தது. இது முதல் படம் என்பதால் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தை ஒரேடியாக குறை சொல்லிவிட முடியாது. அவரின் அடுத்த படத்தை பார்ப்போம். முதல் படத்திலேயே அனைத்து இயக்குநர்களும் வெற்றி பெற்றுவிடுவது இல்லை.
சிக்மா ஓடிடி: சிக்மா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். இந்த மாத இறுதியில் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த படத்தை இயக்கும் வேலையை தொடரவில்லை ஜேசன் சஞ்சய். மாறாக ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அவரை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப் போகும் பாக்கியம் வேறு யாருக்கோ அல்ல சித்தப்பா சஞ்சீவுக்கு தான் கிடைத்திருக்கிறது. விஜய்யின் சித்தி மகனும், நடிகருமான விக்ராந்த் சந்தோஷின் சகோதரர் தான் சஞ்சீவ். சிக்மா படப்பிடிப்பின்போது ஜேசனுக்கு உதவியாக இருந்தவர் தற்போது அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார்.
காதல் படம்?: முதலில் தன் வயதுக்கு ஏற்றது போன்று காதல் படத்தில் தான் ஹீரோவாக நடிப்பேன் என சிக்மா படத்தை விளம்பரம் செய்தபோதே தெரிவித்தார் ஜேசன். அதனால் அவருக்காக அழகான காதல் கதையை உருவாக்கியிருப்பார் சஞ்சீவ் என நம்பப்படுகிறது.
இளம் வயதில் விஜய்ணாவும் தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வெற்றி கண்டார். அதே போன்று ஜேசனும் லவ்வர் பாயாக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கட்டும்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விஜய் காப்பி: ஜேசன் சஞ்சயின் ஹேர்ஸ்டைல், நடை, அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாமே அப்படியே அப்பா ஜோசப் விஜய்யை கண்முன் கொண்டு வருகிறது. அதனால் விஜய்யை இனி படங்களில் பார்க்க முடியாத குறையை அவர் மகனை வைத்து தீர்த்துக் கொள்வார்கள் ரசிகர்கள்.
Source link
