அமைச்சர் வன்னி அரசு திமுக மற்றும் நாதகவை விமர்சித்து இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அதனை விமர்சித்து, திருச்சி சூர்யா கடும் பதிலடிவை கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு இன்று அறிக்கை வெளியிட்டுருந்தார். அதில், தாராபுரத்தில் நாதக வேட்பாளராக போட்டியிட்டு, காவல்துறையால் கைது கார்த்திக்காக்கு ஆதராகவும் அரசை விமர்சித்து ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கையை குறிப்பிட்டு, திமுகவுக்கும் வெட்கமில்லை நாதகவுக்கும் வெட்கமில்லை விமர்சித்திருந்தார். இந்நிலையில், திருச்சி சூர்யா விசிக-விடம் டெப்போ கணக்கில் இருக்கிறது, சில்லறை வியாபாரம் முதல் மொத்த வியாபாரத்திற்கு அணுகவும், வேறு எங்கும் கிளைகள் கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சி சூர்யா அறிக்கை
தி.மு.கவுக்கும் வெட்கமில்லை நா.த.கவுக்கும் வெட்கமில்லை விசிக-விடம் டெப்போ கணக்கில் இருக்கிறது எனவும், சில்லறை வியாபாரம் முதல் மொத்த வியாபாரத்திற்கு அணுகவும்,வேறு எங்கும் கிளைகள் கிடையாது என தெரிவித்து, அதன் கீழே அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை – 83 என முகவரி என குறிப்பிட்டுள்ளர்.
நான் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் கூடிய விரைவில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் இணையும் உங்களின் வெட்கம், மானம், சூடு, சொரணை இதையெல்லாம் டெப்போ கணக்கில் வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காண ஆவலுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த பேசியது நியாபகம் இருக்கா?
மேலும் வெட்கத்திற்கு பேட்டன் ரைட்ஸ் வாங்கிய மாண்புமிகுஅமைச்சர் வன்னி அரசு அவர்களே, கடந்த முறை விஜயை நீங்கள் என்ன பேசினீர்களோ அதை விஜய் மறந்தது போல கண்டிப்பாக திமுக உங்களை மறக்காது மன்னிக்காது என விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதை குறிப்பிட்டுள்ளார்.
வாழ்நாளில் விசிக பாஸ் ஆகாது
திமுக வாவது 34 மதிப்பெண்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு மதிப்பெண் கூட வாங்கி பாஸ் ஆயிடும் ஆனால் ஒரே ஒரு மதிப்பெண் வைத்திருக்கும் நீங்கள் வாழ்நாளில் விளங்க வாய்ப்பில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்ச்சையான அமைச்சர் வன்னி அரசு அறிக்கை
அமைச்சர் வன்னி அரசின் இந்த அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருள் ஆகியுள்ளது. அமைச்சர் வன்னி அரசுக்கு நாதக தலைவர்கள் மற்றும் திமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பார்ப்பனிய அடிமை தான் சீமான்- வன்னி அரசு
கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான். அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான்.
பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது
இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை என அமைச்சர் வன்னிய அரசு கடுமையாக விமர்சித்திருந்தார்.
Source link
