நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், முதல் 5 பேட்டர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஓபனர்கள் டிம் செய்பர்ட் 24 (17), பின் ஆலன் 45 (24) ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில், ஒன்டவுன் பேட்டர் டேரில் மிட்செல் 19 பந்தில் 28 ரன்களை சேர்த்து அவுட் ஆனார்.
பிறகு, இறுதிக் கட்டத்தில், கிளென் பிலிப்ஸ் 40 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை அடித்த நிலையில், பிவோன் ஜாகப்ஸ் 16 பந்தில் 3 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்களை சேர்த்து ரன்அவுட் ஆனார். இப்படி, முதல் 5 பேட்டர்களும் அபாரமாக செயல்பட்டதால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 225/4 ரன்களை எடுத்தது.
இந்திய அணி பௌலர்களில், யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அனைத்து பௌலர்களும் 10 எகனாமியில் பந்துவீசி சொதப்பினார்கள். குறிப்பாக, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.
இந்தியா இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். சஞ்சு சாம்சன், 33 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 67 ரன்களை அடித்த நிலையில், அபிஷேக் சர்மா, 12 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 29 ரன்களை சேர்த்து அவுட் ஆனார்.
அடுத்து, திலக் வர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 11 பந்தில் 6 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில், இஷான் கிஷன் 3 பந்தில் ஒரு ரன்னை மட்டும் அடித்து அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இதில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 28 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 42 ரன்களை எடுத்து அவுட் ஆன நிலையில், அக்சர் படேல் 14 பந்தில் 24 ரன்னை அடித்து அவுட் ஆனார். இறுதிக் கட்டத்தில், நமன் தீர் நிலைத்து நின்று விளையாடி, 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 42 ரன்களை குவித்து, மேட்ச் வின்னராக இருந்தார்.
இறுதியில், இந்திய அணி, 19.4 ஓவர்களில் 230/6 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
நியூசிலாந்து அணியிலும் எந்த பௌலரும் தொடர்ச்சியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மிட்செல் பிரேஸ்வெல் 4 ஓவர்களில் 37 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர், 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
இப்போட்டியில் வென்று, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டி, அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும்.
