பிரான்ஸ் வன்முறைக்கும், இந்திய போராட்டத்திற்கும் தொடர்பு?

– நமது சிறப்பு நிருபர்-

டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டி கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான்பூச்சி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சமீபத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலையை கண்டித்து பிரான்சிலும் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி பாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு விசாரணை நடத்தியது. இதில் ’13 நாடுகளில் போராட்டங்களை ஒருங்கிணைப்பது, ஏற்பாடு செய்வது, தீவிரப்படுத்துவதற்கு 101 அமைப்புகள் செயல்படுகிறன. பிரான்சில் நடந்த கலவரம், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இளைஞர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்பு உள்ளது’ என்பது தெரிந்தது.

இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: நாட்டு மக்கள் முன்பு, குழப்பம் மற்றும் வன்முறைக்கான மாடலை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் முன்வைக்கிறார். இந்த துரோகத்தின் இணைப்புகள் என்பது வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது என்பதை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனால், ‘ இந்த சதிகளின் தலைவர் யார்?’ என கேட்பதில் தவறு இல்லை. எதிர்க்கட்சி தலைவர் முதிர்ச்சியற்றவராகவும், பொறுப்பற்றவராகவும் இருப்பது துரதிர்ஷ்டம்.

இதற்கான காரணத்தை உங்கள் முன் அளித்தால், அவரை சதிகாரர் என அழைப்பதில் தவறாக இருக்காது. பிரான்ஸ் உட்பட 9 நாடுகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்க்கும் முயற்சிக்கான சூழல்கள் எவ்வாறு உருவாகின என்பதை பாக்ஸ் நியூசின் செய்தி காட்டுகிறது.

இது ஒரு ‘சிவப்பு-பச்சை போராட்டச் சூழலமைப்பு. பாக்ஸ் நியூஸ் அறிக்கைப்படி, சிவப்பு என்பது கம்யூனிஸ்ட் குழுக்கள். பச்சை என்பது இஸ்லாமிய குழுக்கள்.. இந்த அறிக்கை, ‘உலகளாவிய குழப்பம் 101 குழுக்களாக வளர்கிறது’ என கூறுகிறது. இந்த 101 அமைப்புகளும் ஒன்பது நாடுகளில் செயல்படுகின்றன,’ என்று கவுரவ் பாட்டியா கூறினார்.

பாஜவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில் ,” சர்வதேச விசாரணை அறிக்கை, குழப்பம் மற்றும் ஆட்சி மாற்றம் என்ற காங்கிரசின் சதியை அம்பலப்படுத்தியது.

புதிய கிளர்ச்சியின் வாயிலாக அதிகாரத்தை கைப்பற்றுவதும், ஆட்சி மாற்றமுமே நோக்கம் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

ராகுலும், சோனியாவும், ப்ரோக்ரசிவ் இண்டர்நேஷனல் அமைப்பை சேர்ந்தவர்களை 2025 ஏப்ரல் 10ம் தேதி சந்தித்தனர். ராகுலும், காங்கிரசும், வெளிநாட்டு ஜனநாயக விரோத சக்திகளின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை இது நிரூபிக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும். போராட்டங்களின் போது அந்த சக்திகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டதா என்பதை விளக்க வேண்டும்,” எனக்கூறினார்.

ஆனால், இந்த அறிக்கை குறித்து காங்கிரஸ் மவுனம் காத்து வருகிறது.

Source link