கவனத்தை ஈர்த்த விஜயின் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம்: மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணம்; யாருடைய அனுமதியும் இல்லாமல் எடுத்துக்கலாம்

தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயின் சிறப்பு வழிகாட்டுதலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய நலத்திட்ட உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் எளிய மாணவ-மாணவிகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், ஜாமெண்டரி பாக்ஸ் (பென்சில் பாக்ஸ்), பள்ளிச் சீருடைகள் மற்றும் பல்வேறு அத்தியாவசியக் கல்வி உபகரணங்கள் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் உள்ள கண்ணாடிப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.

உதவி தேவைப்படும் மாணவர்களும் பெற்றோர்களும் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு யாருடைய முன்னனுமதியும் இன்றி நேரடியாகச் செல்லலாம்.

அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டிகளைத் திறந்து, மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை எப்போது வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிகளில் உள்ள பொருட்கள் காலியானவுடன், உடனடியாக புதிய பொருட்கள் வாங்கி வைக்கப்படும் என்பதால், மாணவர்கள் தடையின்றி இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில் மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த எளிய மற்றும் பயனுள்ள திட்டத்திற்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Source link