-நமது நிருபர்-
செங்கடல் பகுதியில் இந்திய சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியப் படைகள் குறிவைத்துத் தாக்கியதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கப்பலில் இருந்த 14 இந்தியர்களையும் ஹவுதி படை மீட்டுள்ளனர்; அவர்கள் குறித்த முழுமையான தகவல் பின்னர் வெளியிடப்படும் என ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீ தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது; இதற்கு எதிராக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சவுதி அரேபியாவின் தம்மாம் நகரத்தில் உள்ள கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
