'ராஷ்மிகா 100 முறை கேட்ட பிறகே சம்மதித்தேன்.!'- விஜய் தேவரகொண்டாவின் பேச்சு; கொந்தளித்த நெட்டிசன்கள்

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இவர்களது நடிப்பில் ‘ரணபலி’ படமும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான `காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இருவரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

`காஃபி வித் கரண்’

இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பகிர்ந்த கருத்து ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, “திருமணம் செய்துகொள்ளும்படி 100 முறைக்கும் மேல் ராஷ்மிகா கேட்டார். சுமார் ஒரு வருடமாக தொடர்ந்து வலியுறுத்திய பிறகே திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் பலர் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

“ராஷ்மிகா அவரை விட அதிக வெற்றியும் புகழும் பெற்ற ஒரு நடிகையாக இருக்கும்போது, ‘அவர் என்னிடம் கெஞ்சினார்’ என்பது போல் பொதுவெளியில் கூறுவது ராஷ்மிகாவை அவமானப்படுத்துவது போல் உள்ளது” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தவிர மனைவியின் காதலை மதிப்பதை விட்டுவிட்டு, அதை ஒரு பெருமையாக தொலைக்காட்சியில் பேசுவது சரியல்ல என்றும், இந்தப் பேச்சு சிறிதும் ரசிக்கும்படியாக இல்லை என்றும் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link