தங்கம் வென்ற சோலைராஜுக்கு முதல்வர் விஜய் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு @ ஆசிய பாரா விளையாட்டு

சென்னை: 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வவர் விஜய்.

இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் முதல்வர் விஜய் கூறியுள்ளதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழகத்தின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Source link