பிரபல தமிழ் சேனல் செய்தி வாசிப்பாளர் பிரிய வதனா திடீர் மரணம்: சென்னை பிரஸ் கிளப் இரங்கல்

பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரிய வதனா மரணமடைந்த செய்தி பத்திரிகைய துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் 24 வயதான பிரிய வதனா. இவர், சோஷியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது போட்டோஷூட் படங்கள், தனது பணி தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.  மேலும் பிரிய வதனா திரைத்துறையிலும் தனது பயணத்தை சமீபத்தில் தான் தொடங்கினார். சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். 

இந்தநிலையில் பிரிய வதனா மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பத்திரிகையாளர் பிரிய வதனா மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. 

தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் பிரியவதனா பத்திரிகைத்துறையின் மீது மிகுந்த ஆர்வமுள்ள இளம் பத்திரிகையாளர். இதற்கு முன்னர் வேந்தர் தொலைக்காட்சியிலும் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். 

நேற்று (21.10.26) பிரியவதனா அகால மரணமடைந்த தகவல் பத்திரிகையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியவதனா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கார்கே உள்ளிட்ட சில ஊடகவியலாளர்களின் சமூக வலைதள பதிவுகள் பிரிய வதனா தற்கொலை செய்து கொண்டதாக தெரியப்படுத்துகிறது. எனினும் அதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.



Source link