டெல் அவிவ்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்திய பிரதமரும் எனது நண்ப ருமான மோடியுடன் பேசினேன். இஸ்ரேலின் சுதந்திர தின விழாவிற்கு தீபம் ஏற்ற வர வேண்டும் என அவரையும், தைரியமான இந்திய விமானி ஸ்மிட் மச்சாரையும் அழைத்தேன். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
வானிலும், நிலத்திலும் இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்திற்காக போராடி வருகிறது என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பழமையான உறவை வலுப்படுத்தஉறுதி பூண்டுள்ளார். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
