புதுடெல்லி:
சமூக ஆர்வலரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்தநாள் விழா மத்திய அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா புலே வின் திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் சிறிது நேரம் கலந்துரையாடினார்கள். மிகவும் இயல்பாக இருவரும் பேசிக் கொண்டனர்.
அரசியல் ரீதியாக மோடி மீது ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இரு தலைவர்களும் பேசிக்கொண்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல சபாநாயகர் ஓம்பிர்லா, ஜே.பி.நட்டா ஆகியோருடனும் ராகுல்காந்தி பேசினார்.
