பள்ளி, கல்லூரிகள் மழையால் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு – several districts announced school colleges holiday in oct 23 in tamil nadu

தமிழகத்தில் கனமழை தொடர்வதால் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அறிவிப்பின் படி, இன்று (அக்டோபர் 23) காலை 10 மணிக்குள் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களை பார்த்துவிடலாம்.

இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் புதுச்சேரி பகுதிஇதையடுத்து லேசானது மிதமான மழை பெய்யக்கூடிய எல்லோ அலர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்களை பார்த்துவிடலாம். அரியலூர், கோவை, தர்மபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link