இன்று (அக்டோபர் 23) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாள் ரூ.280 உயர்ந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ரூ.640, ரூ.800 மற்றும் ரூ.1,240 என தொடர்ந்து சரிந்தது தங்கம் விலை. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,680 வரை சரிந்துள்ளது.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்த தங்கம், ஒருசில நாட்களில் ஏறினாலும் இதுவரை ரூ.5,000-க்கும் மேல் சரிந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவது, அதன் மீதான முதலீடுகள் குறைவதைக் காட்டுகிறது. தங்கத்தின் மீது ஏற்கனவே செய்த முதலீடுகளும் விடுவிக்கப்பட்டால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 22) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும், ஒரு சவரன் ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.225-க்கு விற்பனையானது
