தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பாஜக தான் அத்தாரிட்டி: அண்ணாமலையை டார்கெட் செய்கிறாரா வானதி சீனிவாசன் – vanathi srinivasan targeting annamalai and says bjp is the authority on nationalism and hindutva

அண்ணாமலை அறிக்கைக்கு பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். அதுகுறித்து இந்த பதில் காணலாம்.

கடந்த சில நாட்கள் முன்னர் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில், நான்ம் கேள்வி கேட்டால், தேச விரோதி என்றும், வெளிநாட்டின் பண்டின் மூலம் பணம் பெற்று வேலை செய்யவதாக பாஜகவினர் விமர்சிப்பதாக அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்த அறிக்கை எஸ்.ஐ.ஆர் விவகாரம் மற்றும் சிஜேபினைர் கைதை கண்டித்தும் பாஜகவை விமர்சித்தும் இருந்தார். இந்த சூழலில் பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜவினர் எதிர்ப்பு

இந்த அறிக்கை தொடர்ந்து பாஜகவினர் பலர் அண்ணாமலையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் அவரின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதால், தேவையற்றை பேசி வருவதாகவும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்களை மேலும் போராட்டத்திறகு தூண்டிவிட்டு, நாட்டில் வன்முறையை ஆதரிப்பதகாவும் அவர் மீது பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

அண்ணாமலை தெளிவுப்படுத்தவில்லை

அண்ணாமலையின் கேள்விகள் அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் சட்டத்தை மீறிய போராட்டத்திற்கும் இடையேயான வேறுபாட்டை தெளிவுபடுத்தவில்லை என பாஜக தலைமை செய்தி தொடபாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்திருந்தார். குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது, அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான அமைதியான தர்ணா போராட்டத்தின் மீது UPA கூட்டணி காலத்தில் நடத்தப்பட்ட அடக்குமுறையை விமர்சித்தார். அது CJP அமைப்பினரின் போராட்டத்தில் இருந்து வேறுபட்டது. யாரையும் விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அனுமதிக்கப்பட்ட இடத்தில் அத்துமீறல், நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறியது, தடைசெய்யப்பட்ட இடத்தில் வன்முறை போன்ற நிகழ்வுகளை அவர் விமர்சிக்காமல் தவிர்க்கும்போது, அவரது விமர்சனம் வலுவிழந்து விடுகிறது அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுருந்தார்.

வானதி சீனிவாசன் அறிக்கை

முன்பெல்லாம், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், “தேசியத்திற்கு பாஜக மட்டும் தான் அத்தாரிட்டியா, பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதியா?” என்று பாஜகவினரை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதே கேள்வியை, இப்போது, பாஜகவால் அரசியல் அடையாளம் பெற்று, வெளியேறியவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

தேச விரோதிகளுக்கு தெரிந்திருக்கிறது

பாஜக ஒருபோதும், ‘தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு அத்தாரிட்டி’ என்று சொன்னதில்லை. சொல்லப் போவதும் இல்லை. ஆனால், ‘தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பாஜக தான் அத்தாரிட்டி’ என்பது, தேச விரோதிகளுக்கு தெரிந்திருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், ‘நான் தேசியவாதி’ என்றும், இந்தியாவில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், ‘நாங்கள் தேசியவாதி’ என்றும் உணர வேண்டும். ‘தேசியத்துக்கு நாங்கள் தான் அத்தாரிட்டி’ என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம்.

பாஜக தொண்டரின் உயிர்மூச்சு

1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி மும்பையில் பாஜக தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் பேசிய பாஜகவின் முதல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், ‘Nation First; Party Next; Self Last’ என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று பிரகடனம் செய்தார். ஒவ்வொரு பாஜக தொண்டரின் உயிர்மூச்சும் இதுதான். பாஜகவினருக்கு எல்லாவற்றையும் விட தேசம் தான் முக்கியம் என குறிப்பிட்டு அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Source link