அனிருத், காவ்யா மாறன் திருமணம்: தனுஷ் விஷயத்தில் ரஜினிகாந்த் எடுத்த முடிவு – dhanush to attend anirudh, kavya maran wedding

அனிருத், காவ்யா மாறனின் திருமணம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் முன்னாள் மருமகன் தனுஷ் பற்றி ஒரு முக்கிய முடிவு எடுத்திருப்பதாக வெளியான தகவல் நடிப்பு ராட்சசனின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கிரீஸில் நடக்கும் அனிருத் திருமணத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து தேசிய விருது வென்ற தனுஷ் கலந்து கொள்ளப் போக்கிறார் என்பதே லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.

ரஜினி குடும்பம்

அனிருத்துக்கும் அவரின் காதலியான காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ம் தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிரீஸில் நடக்கவிருக்கும் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தங்கள் குடும்பத்துடன் தனுஷையும் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் தலைவர். அதனால் அனிருத் திருமணத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் தனுஷை பார்க்கலாம் என வலைப்பேச்சு தெரிவித்திருக்கிறது.

ரஜினி, தனுஷ்

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கு பிறகும் தலைவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார் நடிப்பு ராட்சசன். மேலும் மகன்கள் யாத்ரா, லிங்கா விரும்பிய நேரம் எல்லாம் அப்பா உடன் நேரம் செலவிடுகிறார்கள், பயணம் செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயமே என் பிள்ளைகள் தான். நான் ஒரு நல்ல அப்பா என்பேன் என அவ்வப்போது கூறி வருகிறார் தனுஷ். ஐஸ்வர்யாவும் தனுஷுடன் நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் எல்லாம் ஒரு குடும்பமாக கல்யாணத்திற்கு செல்லவிருக்கிறார்கள்.

ஜெயிலர் 2 FDFS
அனிருத், தனுஷ்

தனுஷின் 3 படம் தான் அனிருத்தை இசையமைப்பாளர் ஆக்கியது. அனிருத், தனுஷ் இடையே நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. இந்நிலையில் தனுஷின் புதுப்படம் ஒன்றுக்கு இசையமைக்கப் போகிறார் அனிருத் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அனிருத் திருமண தகவல் வெளியானதில் இருந்து அது தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அனிருத் பற்றியும், காவ்யா மாறன் பற்றியும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் ரசிகர்கள்.

ரஜினி சினிமா வாழ்க்கை
சொத்துமதிப்பு, சைவம்

Source link