IND vs NZ 2nd T20 – வைபவ் சூர்யவன்ஷி சேர்ப்பு: மாற்றாக வெளியேறும் வீரர் யார் தெரியுமா? பிசிசிஐ அறிவிப்பு – vaibhav sooryavanshi will play in india vs new zealand 2nd t20i match

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில், 226 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 19.4ஆவது ஓவர் வரை போராடி, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி, அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

என்ன காரணம்? இஷான் கிஷனுக்கு, இடுப்பு பகுதியில் தசை பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியின்போதே, அவருக்கு இப்பிரச்சினை இருந்திருக்கிறது. அதனால்தான், இஷான் கிஷன், ஒன்டவுன் இடத்தில் ஆடவில்லை. 5ஆவது இடத்தில் ஆடினார். இந்நிலையில், தற்போது இரண்டாவது போட்டியில் இருந்து இஷான் கிஷனை நீக்கியிருப்பதாக, பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் பேக்கப் வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே பேட்டராக இருக்கிறார். இதனால், சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபனர் இடம் கிடைக்குமா? இருப்பினும், சூர்யவன்ஷிக்கு ஓபனர் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி, பவர் பிளேவில் 94 ரன்களை சேர்க்க முக்கிய காரணமாக இருந்தனர். இதனால்தான், இந்திய அணியால் வெல்ல முடிந்தது. ஆகையால், இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்து, சூர்யவன்ஷிக்கு ஓபனர் இடத்தை கொடுப்பது கடினம்தான்.

அதேநேரத்தில், இஷான் கிஷனின் ஒன்டவுன் இடத்தை சூர்யவன்ஷிக்கு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. நியூசிலாந்து காலநிலையில் விளையாட பேட்டர்கள் தடுமாறுவார்கள். இதனால், அனுபவமில்லாத சூர்யவன்ஷிக்கு ஒன்டவுன் இடம் கொடுக்கப்படுமா அல்லது ஓபனர் இடத்தையே கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஷான் கிஷன் பிட்னஸ் எப்படி இருக்கு? இஷான் கிஷனுக்கு ஏற்பட்டுள்ளது இடுப்பு பகுதியில் லேசான தசை பிடிப்புதான். இது, மூன்றாவது போட்டிக்கு முன் சரியாக வாய்ப்புள்ளது. இதனால், இரண்டாவது போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி, மூன்றாவது இடத்தில் ஆடி, சதம் அடிக்கும் பட்சத்தில், அது இஷான் கிஷனுக்கு பிரச்சினையாக மாறும். சதமடித்த வீரரை பெஞ்சில் உட்கார வைக்க முடியாது. இதனால், இரண்டாவது போட்டியில், சூர்யவன்ஷி எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய டி20 அணி, இதற்குமுன், நியூசிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியபோது, 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியைப் பெற்று அசத்தியது. அது, 2020ஆம் ஆண்டில்தான். விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணி, அபாரமாக செயல்பட்டு அசத்தியது. அப்போது, 3 மற்றும் 4ஆவது போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்றிருந்தது.

நியூசிலாந்து மண்ணில், இந்திய அணி மொத்தம் 4 டி20 தொடர்களில் விளையாடியிருக்கிறது. இந்த நான்கு தொடர்களிலும் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றியுள்ளது. அதாவது, இந்த 4 தொடர்களில், இந்திய அணி மொத்தம் 10 வெற்றிகளை பெற்ற நிலையில், நியூசிலாந்து அணி, ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

2008-09ஆம் ஆண்டி், இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றிய நிலையில், அடுத்து 2018-19ஆம் ஆண்டில் 2-1 என தொடரை வென்றார்கள். பிறகு, 2019-20ஆம் ஆண்டில் 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில், 2022-2023ஆம் ஆண்டில் 1-0 என தொடரை, இந்தியா கைப்பற்றியது.

Source link