ஜெயிலர் 2 போஸ்டர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் திரைக்கு வந்த நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரைக்கு வந்த 7 நாட்களில் உலக அளவில் ரூ. 576 கோடி வசூல் செய்தது. ஜெயிலர் 2 படத்தை பார்க்குமாறு தினமும் ட்வீட் செய்யும் சன் பிக்சர்ஸ் ஏன் ரஜினிகாந்த் படத்தின் வசூல் விபரம் குறித்து ஒரு போஸ்டர் வெளியிடக் கூடாது என ரசிகர்கள் கேட்க அவர்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது.
ஜெயிலர் 2 முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டது என டைகர் முத்துவேல் பாண்டியன் கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படத்துடன் போஸ்டர் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்து சந்தோஷப்பட்டிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
8ம் நாள் வசூல்: இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் 8வது நாள் வசூல் விபரம் அதாவது நேற்றைய வசூல் எவ்வளவு என்பது தெரிந்துவிட்டது. வியாழக்கிழமை அன்று இந்தியாவில் ரூ. 17.15 கோடி கிடைத்திருக்கிறது. மேலும் உலக அளவில் ரூ. 5 கோடி வந்திருக்கிறது என சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 8 நாட்களில் இந்தியாவில் ரூ. 334 கோடியே 35 லட்சமும், உலக அளவில் ரூ. 606.05 கோடியும் வசூல் செய்திருக்கிறது நெல்சன், ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான இரண்டாவது படம்.
ஜெயிலர் படம் ரூ. 600 கோடி வசூல் செய்த நிலையில் அதன் இரண்டாம் பாகமோ எட்டே எட்டு நாளில் ரூ. 606 கோடியை தாண்டி வசூல் செய்து இதுவரை அதிகம் வசூலித்த தமிழ் படமாக ஆகிவிட்டது. அது மட்டும் அல்ல கேரளாவில் விஜய், த்ரிஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான லியோ செய்திருந்த இரண்டு சாதனைகளை முறியடித்துவிட்டது ஜெயிலர் 2.
கிங் ரஜினி: கேரளாவில் ஓபனிங் கிங்காக இருந்து வந்தார் லியோ விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படம் கேரளாவில் முதல் நாளில் ரூ. 12 கோடி வசூல் செய்தது தான் அங்கு ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஓபனிங்காக இருந்தது. இந்நிலையில் ரிலீஸான 15ம் தேதி கேரளாவில் ரூ. 12.50 கோடி வசூல் செய்து ஓபனிங் மகாராஜா நான் தான் என நிரூபித்துவிட்டார் ரஜினிகாந்த். ஆக, சேட்டன்கள் மாநிலத்தில் லியோ செய்திருந்த முதல் நாள் வசூல் சாதனையை ரஜினிகாந்த் படம் முறியடித்தது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இந்நிலையில் கேரளாவில் இதுவரை அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற லியோவின் சாதனையையும் ஜெயிலர் 2 முந்திவிட்டது. லியோ படம் கேரளாவில் ரூ. 59.65 கோடி வசூல் செய்ததாக சாக்னிக் தகவல் இருக்கிறது. அது தான் கேரளாவில் ஒரு தமிழ் படத்திற்கு இதுவரை கிடைத்திருந்த அதிக வசூல் ஆகும்.
ஜெயிலர் 2 படமோ வெறும் ஏழு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ. 60 கோடியே 45 லட்சம் வசூலித்துவிட்டது. எனவே, கேரளாவில் அதிம் வசூலித்த தமிழ் படம் இனி லியோ இல்லை ஜெயிலர் 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
