பெரிய ரீச் ஆன மூர்த்தி; இந்த கேரக்டர் எழுதியது இவருக்காக அல்ல: முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில், படத்தில் ரஜினிகாந்தை விடவும் அதிகமாக பேசப்பட்டு வரும் மூர்த்தி கேரக்ட்ரில் நடித்த நடிகர் நமோ நாராயணன் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த ப்டம் உலகம் முழுவதும் ரூ600- கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 14-ந் தேதி வெளியானது. முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சிரமூடு, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் வசூலில் ரூ600 கோடியை நெருங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்த டைகர் முத்துவேல் பாண்டியன் கேரக்டரை விடவும் முதல் பாதியில், மூர்த்தி கேரக்டரில் நடித்த நடிகர் நமோ நாராணயனின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவரது கேரக்டரை மட்டும் தனியாக வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு அந்த கேரக்டர் பெரிய ரீச் ஆகியுள்ளது. 

இந்நிலையில், ஜெயிலர் 2 படம் குறித்து பேசிய ஆர்ட் டைரக்டர் கிரன், ஜெயிலர் முதல் பாகத்திலேயே நமோ நாராயணன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஜெயிலர் முதல் பாகத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவர் நடித்த காட்சி இடம் பெறவில்லை. ஒரு நல்ல நடிகர் அவர் காட்சியை படத்தில் சேர்க்க முடியவில்லை என்று இயக்குனர் நெல்சன் யோசித்துக்கொண்டே இருந்தார். அப்போது தான் ஜெயிலர் 2 ஸ்கிரிப்ட் எழுத தொடங்கினார். 

இந்த ஸ்கிரிப்ட் எழுதும்போது கூட மூர்த்தி கேரக்டர் நமோ நாராயணனுக்காக எழுதப்படவில்லை. இந்த கேரக்டரில் யார் நடிக்கலாம் என்று பல நடிகர்கள் பரிசீலனையில் வந்தபோது, ஒரு கட்டத்தில் நெல்சன் தான் அவர் சரியாக இருப்பார் அவரை கூப்பிடுங்கள் என்று நமோ நாராயணனை அழைத்தார். அப்படி வந்தவர் தான் நமோ நாராயணன். ஒரு நல்ல நடிகர். பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நம்ம படத்தில் நடித்து அந்த காட்சி படத்தில் இல்லையே என்று யோசித்து தான் அந்த கேரக்டரில் அவர் நடித்தார். 

அதே சமயம் இந்த படத்தில் அந்த கேரக்டர் இவ்வளவு பெரிதாக வரும் என்று அவருக்கே தெரியாது. படத்தில் அவரிடம் இருந்து நடிப்பை நெல்சன் வாங்கியுள்ளார். அதற்காக பல டேக்கள் சென்றுள்ளது என்று கூறியுள்ளார். 

Source link