நமது நிருபர் திருப்பத்தூர் சட்டசபை தொகுதி பிரசாரத்தின் போது, விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது ஜோசப் விஜயா?,

நமது நிருபர்

திருப்பத்தூர் சட்டசபை தொகுதி பிரசாரத்தின் போது, விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது ஜோசப் விஜயா?, ஜோசப் கிருஷ்ணாவா? என நிருபர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்ட பிறகு பதில் அளித்தார்.

சிவகங்கை, திருப்பதூரில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: போகும் எல்லாம் இடங்களிலும் மக்கள் வெள்ளம். நான் ஒன்றும் பெரிய சினிமா நடிகரும் கிடையாது. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிரான சூழ்நிலை எல்லா இடங்களிலும் இருக்கிறது. இந்த ஆட்சி ஒரு குடும்பத்தின் உடைய ஆட்சி.

ஒரு குடும்பம் கொள்ளை அடிப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்றைக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்கப்படுகிறது. எல்லா அமைச்சர்களும் ஓட்டுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். கோவையில் செந்தில்பாலாஜி தங்க நாணயம் கொடுக்கிறார். இதை எல்லாம் மீறி, இரட்டை இலை, தாமரை, குக்கர் சின்னங்கள் எல்லாம் மேலோங்கி நிற்கிறது.

சென்சார் போர்டு ஒரு தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாகும். அது தனது கடமையை செய்யும். ஜோசப் விஜயா? கிருஷ்ணாவா? அவருடைய கட்சியில் ஒருத்தர் கருத்து சொல்வதற்கு எல்லாம் நான் பதில் கருத்து சொல்ல முடியாது.திமுக எத்தனை முறை வெற்றி பெற்று இருக்கிறது. திமுக எத்தனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்து இருக்கிறது. நான் சொல்கிறேன். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததே கிடையாது.

கருணாநிதியும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது. இன்றைக்கு மெட்ரோ திட்டம் வேண்டும் என்றால் உதவி செய்தால் தான் செய்ய முடியும். உங்களால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அறிக்கை கூட போட்டு கொடுக்க முடியவில்லை. தமிழகத்தில் தான் கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் உள்ளது. வார்த்தை ஜாலங்களால் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Source link