குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நேற்று முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சுற்றுலா பயணிகள்

புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கி உள்ளதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து சீரானது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் இன்று காலை முதல் மீண்டும் சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Source link