இந்திராணி கேட்ட கேள்வி.. பதில் சொல்ல மறுக்கும் அயலி – அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி சீரியலை நேற்றைய எபிசோடில் இந்திராணி பணத்தை பறிகொடுத்த நிலையில் இன்று, போலீஸ்க்கு தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ் விசாரணை செய்ய பையில் பணம் இருந்ததாக சொல்ல அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மறுபக்கம் அயலியின் அம்மா அர்ச்சனாவை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்ல போலீஸ் வழியில் இடைமறித்து போலீஸ் சோதனை செய்ய ஆம்புலன்ஸில் அர்ச்சனா இல்லை என்பதே பெரிய வருகிறது. ஃப்ளாஷ்பேக்கில் அயலி ஏற்கனவே அர்ச்சனாவை வேறொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தது தெரிய வருகிறது.
பிறகு அயலி வீட்டுக்கு வர என்னுடைய பையில் 25 லட்சம் ரூபாய் பணம் எப்படி வந்தது? என்கிட்ட கேட்டு இருந்தா ரெண்டு கோடி ரூபாய் கூட கொடுத்து இருப்பேனே இன்று கேள்வி கேட்கிறார் இந்திராணி. ஆனால் வயது எதைப் பற்றி வேணாலும் கேளுங்க பதில் சொல்றேன் ஆனா அந்த பணத்தை பத்தி மட்டும் கேட்காதீங்க, என்னால் பதில் சொல்ல முடியாது என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: கார்த்திக்கின் அதிரடி திருப்பமும்… ரேவதியை பணயம் வைத்த சந்திரகலாவின் சதியும்!
கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார்த்திக் உண்மையைச் சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் சிவனாண்டி தரப்பு இருக்க, ரேவதியைக் கடத்தி கார்த்திக்குக்குச் செக் வைக்கிறார் சந்திரகலா.
தனக்குத் தேவையான ஒரு தோற்றத்தைக் காட்டி, அதே மாதிரி ஒருவரைத் தயார் செய்து தருமாறு தானாராவ்விடம் கேட்கிறார் மகேஸ்வரன் என்கிற மயில்வாகனம். அந்தத் தோற்றத்தைப் பார்த்ததும் அது சதீஷின் தோற்றம் என்பது தெரியவருகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர், தொழிலுக்குத் துரோகம் செய்ய முயன்றவரை மிரட்டி உண்மையை வரவழைக்கிறார். வேறு வழியில்லாமல் அவரும் உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
திருமண மண்டபத்தில் சாமுண்டீஸ்வரியின் அறையில், சிவனாண்டிக்குக் கொடுக்கப்பட்ட பணம் இருப்பதைப் பார்க்கிறார் சந்திரகலா. இந்தப் பணம் இங்கே எப்படி வந்தது, ஒருவேளை அக்காவுக்கு உண்மை தெரிந்துவிட்டதா என்று குழப்பமடைகிறார். வேஷம் போட்டுக்கொண்டு வந்தவன்தான் பணத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று இருவரும் பேசிக்கொள்கின்றனர். இதற்கிடையில், கார்த்திக்கை அடைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று பார்க்கின்றனர். ஆனால் அங்கே கார்த்திக் இல்லை. அவனது ஆட்கள் அனைவரும் அடிவாங்கி மயங்கிக் கிடக்கின்றனர். கார்த்திக் தப்பித்துவிட்டதைப் பார்த்து சிவனாண்டி அதிர்ச்சியடைகிறார்.
மறுபுறம், சுவாதியும் தனலட்சுமியும் சிறைக்குச் சென்று பரமேஸ்வரி பாட்டியைச் சந்திக்கின்றனர். தனக்குத் திருமணம் நடக்கவிருக்கும் விஷயத்தைப் பாட்டியிடம் சொல்லும் சுவாதி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறார். இதனால் அந்தச் சந்திப்பு நெகிழ்ச்சியாக அமைகிறது. கார்த்திக்கிற்கு உண்மை தெரிந்துவிட்டதால், அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிவனாண்டி தரப்பு திட்டம் போடுகிறது. அதன்படி, திருமண மண்டபத்திலிருந்து ரேவதியை ரகசியமாகக் கடத்தி, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்றனர்.
இதற்கிடையில், மண்டபத்திற்குள் வரும் கார்த்திக்கை வழிமறிக்கிறார் சந்திரகலா. “உண்மையைச் சொல்லத்தானே போறீங்க? நேரா போய் இடது பக்கத்துல அக்காகிட்ட உண்மையைச் சொல்லுங்க” என்று சவால் விடுகிறார். கார்த்திக் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, “எல்லாம் சரிதான்… ஆனா ரேவதியை மிஸ் பண்ணிட்டீங்களே!” என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் சந்திரகலா.
உடனே மயில்வாகனத்திடம் உள்ளே சென்று பார்க்கச் சொல்கிறார் கார்த்திக். அங்கே ரேவதி இல்லை என்பது உறுதியாகிறது. அடுத்ததாக, ரேவதியைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் காட்சியைத் தனது செல்போனில் காட்டி கார்த்திக்கை மிரட்டுகிறார் சந்திரகலா. ரேவதியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கார்த்திக், உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார். சந்திரகலாவின் இந்தச் சதியில் இருந்து கார்த்திக் எப்படி தப்பிக்கப் போகிறான்? ரேவதியைப் பத்திரமாக மீட்பானா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சின்னஞ்சிறு கிளியே சீரியல் அப்டேட்: பத்திரத்தைக் கிழித்த இந்து; கார்த்திக்கை அடித்தது யார்? கர்ணாவுக்கு வந்த சந்தேகம்!
சின்னஞ்சிறு கிளியே சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தீனாவிடம் உண்மையைச் சொல்ல வைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் இந்து, குடும்பத்தினரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்கிறாள்.
மாமா, உங்ககிட்ட நாங்க எப்பவாவது நிலத்தை எங்க பேர்ல எழுதிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டோமா? எதுக்காக கர்ணா பேர்ல நிலத்தை எழுதி வச்சிருக்கீங்க? உங்க சொத்தை நம்பியா நாங்க வாழணும்? கர்ணாவை உங்க மூணாவது பையன்னு சொல்றீங்க. அப்போ அவன் உண்மையிலேயே உங்க பையன்தானா? வீட்டு வேலை செய்ய வச்சு, அடிமை மாதிரி நடத்திட்டு, இப்போ மட்டும் அவனை உங்க பையன்னு சொல்றீங்களா? எங்களை ஒரு வார்த்தைகூட கேட்காம நீங்களாவே முடிவெடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? எங்களால சொந்தக் கால்ல நிக்க முடியும். உங்க சொத்து எங்களுக்கு வேண்டாம்!” என்று கோபமாகப் பேசுகிறாள்.
இந்து இப்படிப் பேசுவதைக் கேட்டு கர்ணாவும் திவாகரும் ஆத்திரமடைகிறார்கள். அவளை வெட்டிவிட வேண்டும் என்று அரிவாளை எடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்து எதற்கும் பயப்படாமல், அனைவரின் முன்னிலையிலும் நிலப் பத்திரத்தைக் கிழித்து வீசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். இந்து பத்திரத்தைக் கிழித்ததைப் பார்த்த கிருபா, “உங்களுக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? ஏதோ கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம்.
எதுக்காக நிலத்தை அவ பேர்ல எழுதிக் கொடுத்து, இப்போ அவகிட்ட திட்டு வாங்கி அசிங்கப்படணும்? பாருங்க, அவ எப்படி பேசிட்டுப் போறா!” என்று கிண்டலாகப் பேசுகிறான். மறுபக்கம், பாண்டியும் கர்ணாவும் பேசிக்கொண்டிருக்கும்போது தீபாவும் கார்த்திக்கும் அங்கு வருகிறார்கள்.
கார்த்திக்கின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த கர்ணா, என்னாச்சு என்று அவன் முகத்தைத் தொட்டுப் பார்க்கிறான். அப்போது வலியால் கார்த்திக் அலறுகிறான். இதனால் கர்ணாவுக்குச் சந்தேகம் வருகிறது. ஆனால், கார்த்திக்கும் தீபாவும் உண்மையைச் சொல்லாமல், “பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டேன். வேற ஒண்ணும் இல்லை” என்று சமாளிக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும், “வண்டியில அடிபட்ட மாதிரி எந்தக் காயமும் தெரியலையே… ஆனா பைக் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னு சொல்றானே!” என்று பாண்டி தனது சந்தேகத்தைக் கர்ணாவிடம் சொல்கிறான். இதற்கிடையில், இந்து தீனாவைச் சந்தித்து நடந்ததை விளக்குகிறாள்.
மாமா, ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகுதுன்னு எனக்குத் தோணுச்சு. சித்ரா போன் பண்ணி விஷயத்தைச் சொன்னதாலதான், நான் வர்ற வழியிலேயே இந்தப் போலி டாக்குமெண்ட்டைத் தயார் பண்ணி, இந்த நாடகத்தை நடத்திச் சமாளிச்சேன். இல்லேன்னா உங்க ரெண்டு பேரோட உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். என்னை மன்னிச்சிடுங்க!” என்று சொல்கிறாள். மேலும், கர்ணாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகச் சாமியார் சொன்ன விஷயத்தையும் தீனாவிடம் தெரிவிக்கிறாள்.
மற்றொரு பக்கம், கார்த்திக்கைத் தனியாக அழைத்துச் செல்லும் தீபா, பணப் பிரச்சினை காரணமாக யாரோ அவனை அடித்ததை நினைத்து வருத்தப்படுகிறாள். உண்மையை கர்ணாகிட்ட சொல்லியிருக்கலாம்ல? நல்லவேளை, அவனுக்குத் தெரியாம சமாளிச்சிட்டோம்!” என்று கார்த்திக்கிடம் பேசுகிறாள். அப்போது திடீரென அங்கு வரும் கர்ணா, இருவரும் பேசுவதைக் கேட்டுவிடுகிறான். உடனே கோபத்துடன், “உன் மேல கை வச்சது யாருடா?” என்று கார்த்திக்கிடம் கேட்கிறான். இதைக் கேட்டு கார்த்திக்கும் தீபாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
கார்த்திக்கை அடித்தது யார் என்ற உண்மை கர்ணாவுக்குத் தெரிய வருமா? அவனைத் தாக்கியவர்களைப் பற்றி தெரிந்ததும் கர்ணா என்ன செய்யப் போகிறான்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
