-நமது சிறப்பு நிருபர்-
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், பங்குச் சந்தையில் முதன்முறையாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வழங்கும் திட்டமே ஜியோ ஐபிஓ. ரூ.30,200 கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் மெகா ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான ஐபிஓ விண்ணப்பங்களை பெற்று, உலகிலேயே ஐபிஓவிற்கு அதிக விண்ணப்பங்களை பெற்ற நிறுவனம் என்ற சாதனையை எட்டியுள்ளது. வாரீ எனர்ஜீஸ் லிமிடெட் பெற்ற, 97 லட்சம் விண்ணப்பங்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்து உள்ளது. ஜியோ ஐபிஓவிற்கு இன்றிரவு (அக். 23) 7 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இன்று மாலை நிலவரப்படி, இந்த மெகா ஐபிஓ ஒட்டுமொத்தமாக 16 மடங்குக்கும் மேல் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 47 மடங்கு அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர். அக்டோபர் 26 (திங்கள் கிழமை) அன்று உங்களுக்குப் பங்குகள் கிடைத்துள்ளதா என்பது தெரியவரும். பங்குகள் கிடைக்காதவர்களுக்கு அக்டோபர் 27 அன்று பணம் திரும்பப் பெறப்படும்.
