பிக் பாஸ் ஜூலி மீண்டும் கர்ப்பம்: முதல் கரு கலைய யார் காரணம் தெரியுமா?

போட்டியாளர் ஜூலி: celebrity master chef டிவி நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார் ஜூலி எனப்படும் மரிய ஜூலியானா. ஜூலி வருவார் என எதிர்பார்க்காத பிற போட்டியாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் பார்வையாளர்களும் கூட ஜூலியை அங்கு எதிர்பார்க்கவில்லை தான்.

12 பேர் போட்டியிருக்கும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளராக இருக்கிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. ஜூலி என்ட்ரி கொடுத்ததும் நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். சமந்தா கேட்ட கேள்விக்கு ஜூலி பதில் அளித்தபோது தான் அவர் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

கர்ப்பிணி ஜூலி: ஜூலி தெரிவித்ததாவது, மாஸ்டர் ஷெப் நிகழ்ச்சி என் வாழ்க்கையின் சிறந்த நினைவாக இருக்கப் போகிறது. நான் நிறைய இடங்களில் லவ் தேடி அது எனக்கு கிடைத்தது. அதை தாண்டி நான் நிறைய வெறுப்பையும் பார்த்திருக்கிறேன். நம் குடும்பம், நண்பர்கள், சுற்றி இருப்பவர்களை அது பாதிக்கிறது. மிஸ்கேரேஜ் ஆன பிறகு நான் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன். 6 மாதம் ஆகிவிட்டது.

இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கும், என் குழந்தைக்கும் நிறைய லவ் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். என் கணவர் எனக்கு முழு ஆதரவாக இருக்கிறார். குறிப்பாக கடினமான நேரங்களில் பக்கபலமாக இருந்தார். இந்த வெற்றியை அவருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். என் கணவருக்கு பெற்றோர் கிடையாது. நான் தான் அவரின் ஒரே சொந்தம். தற்போது இன்னொரு சொந்தம் வரவிருக்கிறது என கண்ணீருடன் கூறினார்.

அவர் சொன்னதை கேட்டு கர்ப்பிணியான சமந்தா க்யூட் ரியாக்ஷன் கொடுத்தார். ஜூலி கர்ப்பம் என தெரிந்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் நலம் விரும்பிகள். இது போன்ற நேரத்தில் ஓய்வெடுக்காமல் இப்படி சமையல் போட்டியில் கலந்து கொள்வது ஸ்ட்ரெஸ்ஸாகாதா என ரசிகர்கள் அக்கறையுடன் கேட்டிருக்கிறார்கள்.

ஜூலி கண்ணீர்: ஜூலிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் தொழில் அதிபர் முகமது இக்ரீமுடன் சென்னையில் திருமணம் நடந்தது. அதன் பிறகு கர்ப்பமான ஜூலிக்கு மார்ச் மாதம் கரு கலைந்தது. தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக பேசியதற்காக ஆன்லைனில் மோசமாக பேசி, அவரின் கேரக்டரை பற்றி தரக்குறைவாக விமர்சித்து ஜெயிக்கணும் என்பதை சொல்ல வார்த்தை இல்லை என்று மே மாதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஜூலி.விஜய் ரசிகர்கள், தவெகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து, கிண்டல் செய்த ஸ்ட்ரெஸ் தான் கரு கலைந்ததற்கான காரணம் என அப்பொழுது மேலும் கூறினார் ஜூலி.

விஜய் பிடிக்கும்: இந்நிலையில் ஜூலி போட்டியாளராக இருக்கும் அதே சமையல் நிகழ்ச்சியில் சமந்தாவிடம் அவருக்கு பிடித்த ஹீரோ பெயரை சொல்லுமாறு கேட்கப்பட்டது. அதற்கு சமந்தாவோ கொஞ்சம் கூட யோசிக்காமல் தளபதி விஜய் பெயரை கூறினார்.

விஜய்ணாவுக்கு சமந்தா லக்கி சார்ம் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். இந்நிலையில் சமந்தாவோ, விஜய் தனக்கு லக்கி சார்ம் என கூற அவர்களுக்கு ஒரே சந்தோஷம். விஜய்யை பற்றி சமந்தா பெருமையாக பேசியபோது கேமரா அப்படியே ஜூலி பக்கம் திரும்ப அவர் சிரித்த முகமாக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ஜூலி முகத்தை பார்க்கணுமே, ஈயாடல. அந்த ரியாக்ஷனை பார்க்கப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது என்று தெரிவித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

Source link