சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரை சென்ற இந்தியர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்பிவிட்டனர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
அவரின் பதிவு;
இந்திய குடிமக்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. ஏற்கனவே 10,000 உம்ரா யாத்ரீகர்கள் நாடு திரும்பிவிட்டனர். அங்கு சிக்கி தவித்த மற்ற யாத்ரீகர்களும் நாடு திரும்பி இருக்கின்றனர். எஞ்சிய யாத்ரீகர்களுக்கு வேண்டிய உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. அவற்றின் தொடர்பு எண்கள்;
இந்திய தூதரகம், ரியாத்; +966-554412016, +966-542126784 (தொலைபேசி
8002471234 ( கட்டணமில்லா தொலைபேசி – சவுதி அரேபியாவிற்குள் இருந்து மட்டும் அழைப்புகள்)
வாட்ஸ் அப் மெசேஜ்; +966-536216082
இந்திய துணை தூதரகம், ஜெட்டா; +966-12-2614093; +966-556122301
வாட்ஸ்அப்: +966-536209704
