கோவை: தனியார் நிறுவனத்திடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக, பெண் வணிக வரி உதவி கமிஷனர், கணவருடன் கைது

கோவை: தனியார் நிறுவனத்திடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக, பெண் வணிக வரி உதவி கமிஷனர், கணவருடன் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கோவை வடக்கு வணிகவரித்துறை உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி வயது 48. இவர், வணிகவரி தொடர்பான விசாரணையை முடிப்பதற்காக சிங்காநல்லூரை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 60,000 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

லஞ்சம் தர மறுத்த அந்நிறுவனத்தினர் இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், நிறுவனத்தினர் லஞ்சப் பணத்தை கொடுப்பதற்கு வந்தனர்.

அப்போது மகேஸ்வரிக்காக லஞ்சப் பணத்தை வாங்க வந்த அவரது கணவர் தனசேகரன், 51, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவிக்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

கணவன் மனைவி இருவரையும் நேருக்கு நேராக வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மகேஸ்வரியும் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Source link