டெங்கு அதிகரிக்க த.வெ.க-வின் மெத்தனப்போக்கே காரணம்: மேயர் பிரியா சாடல்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மெத்தனப் போக்கே முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், தவெக ஆட்சியாளர்களின் இந்த அலட்சியமும் மெத்தனப் போக்குமே தற்போது டெங்கு காய்ச்சல் பெருமளவில் அதிகரிப்பதற்கு முதன்மை காரணமாக அமைந்துவிட்டது என்றும் மேயர் பிரியா சாடியுள்ளார்.  

Source link